search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தைக்கு ஆயுள் தண்டனை"

    தேன்கனிக்கோட்டை அருகே மகளின் தோழியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேசன்(35). இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு முருகேசனின் மகளுடன் படித்த, அவரது தோழியான 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிற்கு வந்த மகளின் தோழியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ந் தேதி அந்த சிறுமியை அழைத்து கொண்டு முருகேசன் வெளியூர் சென்றுவிட்டார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி கடந்த 2016ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, தன்னை ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 12 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை, அபராதமாக ரூ. 25 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    காங்கயம் அருகே மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ் (44) வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் முதல் மகளும் சென்று விட்டார். 13 வயதான 2-வது மகள் தந்தையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு 13 வயது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த விவரம் சைல்டு லைன் அமைப்பினர் கவனத்துக்கு தெரிய வந்தது. அவர்கள் குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.

    சிறுமியிடம் விசாரித்த போது அவரது தந்தை எபிநேசன் துரைராஜ் பல முறை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில நடைபெற்றது.

    இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனைகளும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து எபிநேசன் துரை ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ×